நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடிகள் விற்பனை

Update: 2023-08-09 18:45 GMT

மத்திய அரசு இந்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று இல்லங்கள் தோறும் தேசிய கொடியை பறக்க விட்டு கொண்டாடிட வேண்டுகோள் விடுத்து உள்ளது. நாமக்கல் கோட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல் தலைமை தபால் நிலையம், திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் மற்றும் துணை அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25 எனவும், நாமக்கல் கோட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என்றும் தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்