பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த பண்ருட்டி வாலிபர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-10-16 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

ரகசிய தகவல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த நகராஜ் மகன் விக்னேஷ்ராஜ்(வயது 21) என்பவரின் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் அவரது தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியானந்தம் தலைமையிலான போலீசார் காரப்பட்டு கிராமத்துக்கு விரைந்து சென்று விக்னேஷ்ராஜ் வீ்ட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

6 பேர் கைது

இது தொடர்பாக விக்னேஷ்ராஜ் மற்றும் பண்ருட்டி தாலுகா திருவதிகையை சேர்ந்த காஜாமைதீன் மகன் ஷேக்அசீம்(21), பெரியகாட்டுப்பாளையம் சபாபதி மகன் நவீன்(21) காரப்பட்டு கிராமம் அன்பழகன் மகன் வினோத்(21), சித்தானங்கூர் கிராமம் ராமலிங்கம் மகன் ரகுபதி(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இவர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து 5 பேரை சிறையிலும், 17 வயது சிறுவனை விழுப்புரத்தில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளியிலும் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்