புனித சவேரியார் பேராலய சப்பர பவனி

பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலய சப்பர பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-12-02 21:48 GMT

நெல்லை பாளையங்கோட்டை மறைமாவட்ட புனித சவேரியார் பேராலய பெருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பேராலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது. நேற்று பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக புனிதரின் சப்பர பவனி நடந்தது. இதனை முன்னிட்டு காலை தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பங்குதந்தை ஆண்டோ தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது. மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை முதன்மை குரு குழந்தைராஜ் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து மறையுரையும் நடந்தது. பின்னர் புனிதரின் சப்பர பவனி நடந்தது. பாளையங்கோட்டை முக்கிய வீதிகளில் சப்பரம் பவனி வந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் சந்தியாகு, செல்வின், இனியோ இறையரசு மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலையில் கொடியிறக்கம் நடக்கிறது. நாளை உறுதிபூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்