கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் நெல்லையப்பன், கிளை தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோட்ட செயலாளர் பூராஜா, கிளை செயலாளர்கள் பிச்சையா, ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொருளாளர் முருகன், கிளை பொருளாளர் பட்டுராஜன் ஆகியோர் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் கிராஜூட்டி வழங்க வேண்டும், 180 நாட்கள் விடுப்பு சேமிப்பை ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு பணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்