மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-27 15:52 GMT

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வன உரிமைச்சட்டம் 2006-ஐ அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு மற்றும் பயிர் இழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகையை அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாத அனைத்து பழங்குடி மக்கள் குடும்பத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவை போல் ரூ.10 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்குமாறும், வன பாதுகாப்புச் சட்டம் 1980-ஐ திரும்ப பெறுமாறும், பழங்குடியின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திடுமாறும், பழங்குடி மக்களின் துணைத்திட்ட நிதியை பழங்குடி மக்களுக்கு செலவிடுவாறும் வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்