ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளராக கவர்னர் செயல்படுகிறார்

ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளராக கவர்னர் செயல்படுகிறார்

Update: 2022-06-12 16:32 GMT

திருவாரூர்:

ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளராக கவர்னர் செயல்படுகிறார் என திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். கொள்ைக பரப்பு செயலாளராக...

ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளராக தமிழக கவர்னர் செயல்படுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரப்பட்டும்.

ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கும்

மேட்டூர் அணை திறக்கப்பட்டு இதுவரை கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. பல இடங்களில் பாலம் கட்டும் பணி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அதனை அரசு விரைந்து முடித்து கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

நெல் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுக்க தனி கண்காணிப்பு குழுவை முதல்-அமைச்சர் அமைக்க வேண்டும்.

மாநிலங்களவை தேர்தலில் அதிக அளவில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இது பிரதிபலிக்கும். எதிர்க்கட்சிகள் வருகிற 15-ந் தேதி ஒன்று சேர்ந்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி தனியாக கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது தவறானது.

மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பா.ஜ.க. துணை இல்லாமல் ரூ.145 கோடி ஊழல் நடைபெற வாய்ப்பே இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு நிதானமாக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு தனி சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசம் கொண்டு வர வேண்டும்.

இன்னும் சில காலத்தில் பா.ஜனதா கட்சிக்கு உள்ளேயே மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் வரும்போது எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிைணயும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, நிர்வாகி ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்