ஆம்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

ஆம்பூரில் நேற்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

Update: 2023-04-16 17:57 GMT

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு இருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனக்கருதி தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. ஐகோர்ட்டு உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நட்டில் சுமார் 45 இடங்களில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது. இன்த பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் 12 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் ஆம்பூரில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

அப்போது பேரணியில் சீருடை அணியாமல் வந்த சில நபர்களை போலீசார் ஊர்வலத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 600--க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்