ரூ.43 கோடி சுயஉதவி குழு கடன் தள்ளுபடி-சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் ரூ.43 கோடி சுயஉதவி குழு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்

Update: 2023-02-07 18:45 GMT

தென்காசி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், "கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் 31-3 -2021 தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்களை தமிழக முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களான நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 1392 சுய உதவி குழுக்களை சேர்ந்த 14,236 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.43 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 42 தமிழ்நாடு அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமண குமார், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்