பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கலவை ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Update: 2022-05-28 13:02 GMT

கலவை

கலவை தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடந்தது.

வருவாய் கிராம வாரியாக மூன்று நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை தொடர்பாக 172 பேரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையர் சத்ய பிரசாத், கலவை தாசில்தார் ஷமீம், திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் இந்துமதி வரவேற்றார்.

கோட்டாட்சியர் பூங்கொடி தலைமை தாங்கி 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 15 பேருக்கு ரேஷன் கார்டு, 4 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, சலவை பெட்டி, முதல்-அமைச்சரின விரிவான வேளாண்மை திட்டத்தின் மூலம் 6 பேருக்கு நல உதவி உள்பட மொத்தம் 50 பேருக்கு ரூ.8.10 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன 106 மனுக்கள் நிலுவையில் உள்ளது.

நிகழ்ச்சியில் கலவை பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், துணைத்தலைவர் நீலாவதி தண்டபாணி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், மண்டல துணை தாசில்தார் இளையராஜா உள்பட வருவாய்துறை அலுவலர்கள் கலந்து ெகாண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்