கட்டிட தொழிலாளி வீட்டில் ரூ.4¼ லட்சம் நகை கொள்ளை

விழுப்புரம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-11-25 18:45 GMT

விழுப்புரம்

கட்டிட தொழிலாளி

விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூர் காளி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சாம்பசிவம்(வயது 38). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு அவரது 2 மகன்களும் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் சாம்பசிவத்தின் மனைவி கலைவாணி, காலை 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை, கதவின் வாசல்கால் பகுதி இடுக்கில் வைத்துவிட்டு ஆடு மேய்க்க சென்றார். பின்னர் அவர் மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

12 பவுன் நகை கொள்ளை

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் உள்ள 4 பேரும் வெளியில் சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், நைசாக சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.4¼ லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்