நாமக்கல் அருகே விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி -முதல் அமைச்சர் அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ராசிபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் இருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் போலீஸ்காரர் தேவராஜன் (வயது 37) , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் (55) உயிரிழந்தனர்
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது .உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கவும் முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.