விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நிதி
விருதுநகர் அருகே விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவில் ஆலங்குளம் போலீஸ்கழகத்தில் பணியாற்றிய முதல்நிலை போலீஸ்காரர் செல்வகுமார் கடந்த டிசம்பர் மாதம் பணி முடிந்து வரும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவருடன் கடந்த 2011-ல் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள 4,700 போலீசார் அவரது குடும்ப நல நிதிக்கு ரூ.23 லட்சத்து 79 ஆயிரத்து 801-ஐ வழங்கினர். இந்த நிதியினை மறைந்த போலீஸ்காரர் செல்வக்குமாரின் மனைவி பிரியங்காவிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செல்வக்குமாரின் மனைவி பிரியங்கா கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மாரிமுத்து என்ற போலீஸ்காரரின் மகள் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் அந்த சிறுமியின் சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் நிதியினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் வழங்கினார்.