வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள்-பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள்-பணம் கொள்ளை

Update: 2023-05-21 18:45 GMT

பேராவூரணியில் வீட்டின் பூட்ைட உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள்-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ரூ.2லட்சம் நகைகள், பணம் கொள்ளை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எம்.அருண்குமார் (வயது35). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஆனந்தவல்லி வாய்க்கால் வடகரையில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக வீடு மராமத்து செய்வதற்காக வீட்டை பூட்டி வைத்துவிட்டு குடும்பத்துடன் கே.கே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆனாலும் தினமும் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு இரவு விளக்கு எரியவிட்டு செல்வது வழக்கம்.

நேற்று காலை அருண்குமார் வீட்டிற்கு வந்து பார்த்த ேபாது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகள், ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வலைவீச்சு

இதுகுறித்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் அருண்குமார் புகார் கொடுத்தார். அதன்ே்பரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர், சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்ைத பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்