ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடிசக ஊழியர் மீது வழக்கு

ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சக ஊழியர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-12-28 18:45 GMT

விக்கிரவாண்டி அருகே உள்ள எம்.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பாலய்யா (வயது 67). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் பணிமனையில் டிரைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அதே பணிமனையில் சுந்தரிப்பாளையத்தை சேர்ந்த சிவதாஸ் (61) என்பவர் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், பாலய்யாவிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடும்ப செலவுக்காக ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் இதுநாள் வரையிலும் அந்த பணத்தை பாலய்யாவுக்கு திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து பாலய்யா, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிவதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்