ரூ. 1,500 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை

ரூ.1,500 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-21 19:35 GMT


ரூ.1,500 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மானியங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் அரசின் வசதிகள் மற்றும் மானியங்களை பெற்று நிறுவனங்கள் தொடங்கி இணையதளத்தில் பதிவு செய்யலாம். தமிழ்நாடு அரசு 2023-ம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தினை உயர்நிலைக்கு கொண்டு செல்ல பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநில அளவில் பல்வேறு தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவும் ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்திட முடிவு செய்துள்ளது.

மாவட்டத்தில் ரூ. 1,500 கோடி முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் அனைத்து குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லூரி கூட்டமைப்பு அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து முதலீடுகளை உறுதி செய்வதற்கான வழி முறைகளை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் பதிவு

ரூ. 90 லட்சத்திற்கு மேலான எந்திரதளவாட மதிப்புள்ள தொழிற்சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப்பட்ட உணவகங்கள், கல்லூரிகள் நிர்மாணித்தல், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில் மற்றும் வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து விதமான நிலைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், தொழில் ஆர்வலர்கள் மற்றும் வணிக செயல்பாட்டாளர்களாகிய அனைத்து தரப்பினரும் இணையதளத்தில் பதிவு செய்து வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

முன்னேற விளையும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட இந்த மாவட்டத்தினை தொழில் வளர்ச்சியில் மேன்மையடைய செய்வதோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம். மாவட்ட தொழில் மையத்தில் புரிந்துணர்வுஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள் மற்றும் மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்