வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-09-21 19:36 GMT

காரைக்குடி

காரைக்குடி பொன்நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவர் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் அலுவலகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காரைக்குடி பாரிநகரை சேர்ந்த சண்முகநாதன் அறிமுகம் ஆனார். சண்முகநாதன், சரவணனிடம் எனக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளிடம் பழக்கம் உண்டு. அவர்கள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன். உனக்கு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். இதை நம்பிய சரவணன் வேலைக்காக ரூ.12 லட்சத்தை சண்முகநாதனிடம் கொடுத்தாராம். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்து சரவணன் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சண்முகநாதன் அவரது மனைவி தேவி பிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்