பள்ளிவாசல்கள்-தர்காக்களை புனரமைக்க ரூ.10 கோடி மானியம்: முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு வக்பு வாரியம் நன்றி

பள்ளிவாசல்கள்-தர்காக்களை புனரமைக்க ரூ.10 கோடி மானியம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வக்பு வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.

Update: 2023-01-14 22:24 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை புனரமைப்பிற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ரூ.6 கோடி மானியம் அளித்ததை தொடர்ந்து 77 வக்பு நிறுவனங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வக்பு நிறுவனங்கள் புனரமைப்பிற்காக போதிய நிதியின்றி உள்ளதை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பிற்காக வழங்கப்படும் மானியத் தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தி அறிவித்தார். இந்த மானியத் தொகையின் வாயிலாக இந்த ஆண்டு அதிக வக்பு நிறுவனங்கள் பயன் பெறும்.

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு மானியத்தொகையினை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சருக்கும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு அமைச்சருக்கும் தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பாக வாரியத்தலைவர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்