வங்கியில் பணம் எடுத்து வந்த விவசாயியிடம் ரூ.1¼ லட்சம் பறிப்பு

வங்கியில் பணம் எடுத்து வந்த விவசாயியிடம் ரூ.1¼ லட்சத்தை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-10-08 20:47 GMT

துறையூர்:

பணம் பறிப்பு

துறையூரை அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 71). விவசாயியான இவர் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.

இதையடுத்து பாலக்கரையில் உள்ள ஒரு கடையில் அவர் ஒரு பொருள் வாங்கியபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 ேபர், கிருஷ்ணசாமி கையில் வைத்திருந்த பணம் இருந்த பையை பறித்துக்கொண்டு ஓடினார்கள்.

போலீசார் விசாரணை

இது குறித்து கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவை பார்வையிட்டு, விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்