வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 20-க்கும் மேற்பட்டவர் களிடம் ரூ.1 கோடி மோசடி செய்த நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-11 19:00 GMT

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 20-க்கும் மேற்பட்டவர் களிடம் ரூ.1 கோடி மோசடி செய்த நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெளிநாட்டில் வேலை

கோவை -மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரில் வெளி நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி நிறுவனம் நடத்தி வந்தவர் ஜோஸ்வா (வயது34).

இது பற்றி அவர் ஆன்லைன் மூலம் பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக தகவல் அனுப்பினார்.

அதை நம்பி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விருதாச்சலம் ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 56) என்ப வர் ஜோஸ்வாவை அணுகினார்.

அவரிடம், கனடா உள்பட பல்வேறு நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக ஜோஸ்வா கூறினார்.

ஆசை வார்த்தை

மேலும் பணம் கொடுத்தால் வெளிநாட்டுக்கு அனுப்பி பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வைப்பதாக ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பிய ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்தார்.

ஆனால் பணத்தை வாங்கிய ஜோஸ்வா வேலை வாங்கித் கொடுக்க வில்லை. மேலும் பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டதாக தெரிகிறது.

இது குறித்து ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீ சார் விசாரணை நடத்தினர். அதில், ஜோஸ்வா, வெளிநாட்டில் வேைல வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி செய்தது தெரிய வந்தது.

ரூ.1 கோடி மோசடி

இதனால் அவர் மீது பலரும் புகார் செய்து வருகிறார்கள். அந்த வகையில் 20 பேரிடம் ரூ.1 கோடி வரை ஜோஸ்வா மோசடி செய்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ஜோஸ்வா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் சிலரிடம் மோசடி செய்த வழக்கில் ஜோஸ்வா டெல்லி போலீ சாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கோவையில் புதிய நிறுவனத்தை தொடங்கி மேலும் பலரிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்