குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.;
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சிவா என்கிற மொட்ட சிவா( வயது 37). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சீர்காழி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா பரிந்துரையின் பேரில் கலெக்டர் மகாபாரதி மொட்ட சிவாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து கொள்ளிடம் போலீசார் மொட்ட சிவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைக்கும் வகையில் நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.