வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது - போலீசார் உயிர் தப்பினர்

வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததில் போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-09-18 08:11 GMT

சென்னை வியாசர்பாடி போலீஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழமையானது. இடியும் நிலையில் உள்ளது. ஆபத்தான அந்த கட்டிடத்தில்தான் போலீஸ் நிலையம் தொடர்ந்து இயங்கி வருகிறது. மழை காலங்களில் போலீஸ் நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் பணிகள் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் பதிவு அறையில் உள்ள மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த போலீசார், அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். நல்லவேளையாக போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேற்கூரை சிமெண்டு பூச்சின் ஒரு பகுதி இரும்பு கம்பிகள் தெரியும் வகையில் அந்தரத்தில் தொங்கியது. இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்