விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை

தலைவாசல் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது.

Update: 2022-12-07 20:16 GMT

தலைவாசல்:-

தலைவாசலை அடுத்த சாமியார் கிணறு பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (வயது 45), விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுகு்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, அங்குள்ள புற்றுமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

கோவிலுக்கு சென்று வீட்டு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போய் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து லோகநாதன் தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்