வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.2½ லட்சம் கொள்ளை
வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.2½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம், கள்ளிமேடு, தலைஞாயிறு பகுதிகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வந்த 3 வாடிக்கையாளர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். ஒரே நாளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேதாரண்யம் பகுதியில் இதுவரை வங்கிகள் முன்பு 10-க்கும் மேற்பட்ட முறை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும், கொள்ளையில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.