சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யு. வாரச்சந்தை மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சங்க செயலாளர் முத்துவிஜயன் தலைமை தாங்கினார். வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் சாலையோர கடைகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும், டெண்டர் விடுவதை கைவிட்டு பேரூராட்சி நகராட்சி நிர்வாகங்களே வாடகை தீர்மானித்து சந்தைகளில் வாடகை வசூல் செய்ய வேண்டும், தொழில் முறை ரவுடிகளை வைத்து வார சந்தை வியாபாரிகளை மிரட்டும் அபிராமம் மற்றும் முதுகுளத்தூர் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பரமக்குடி சப்-கலெக்டர் முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கருப்பையன், மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட தலைவர் சந்தானம், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் அய்யாத்துரை, வாசுதேவன், செந்தில், கருணாமூர்த்தி, ஆலடிஸ்வரன், ராமச்சந்திரபாபு, ராமு, அண்ணாதுரை, பசலைநாகராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.