சாலைமறியல் வழக்கு: சேலம் கோர்ட்டில் அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க. நிர்வாகிகள் ஆஜர்

சாலைமறியல் வழக்கு: சேலம் கோர்ட்டில் அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க. நிர்வாகிகள் ஆஜரானார்கள்.

Update: 2022-12-21 23:06 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி நடந்த கலவரத்தில் பா.ம.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து சேலம் புதிய பஸ்நிலையம் அருகே பா.ம.க. நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு வந்த பள்ளப்பட்டி போலீசார் அருள் உள்பட 47 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ உள்பட 45 பேர் நேற்று மாஜிஸ்திரேட்டு திருக்குமரன் முன்னிலையில் கோர்ட்டில் ஆஜராகினர். பின்னர் அவர் இந்த வழக்கை ஜனவரி 31-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். இந்த வழக்கில் வக்கீல்கள் விஜயராசா, குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்