தென்காசியில் சாலை விரிவாக்க பணி; போக்குவரத்து மாற்றம்

தென்காசியில் சாலை விரிவாக்க பணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-27 18:45 GMT

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் இருந்து மதுரை சாலையில் கடையநல்லூர் வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. சுமார் ரூ.40 கோடி செலவில் நடைபெறும் இந்த பணியில் சாலையின் இருபுறம் உள்ள மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படுகின்றன. இதற்காக மதுரை சாலையில் வழக்கமாக செல்லும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடையநல்லூர், சங்கரன்கோவில், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்கள் கணக்கப்பிள்ளை வலசை, இலத்தூர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

இதேபோன்று மதுரை, சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இலத்தூர் ரவுண்டானாவில் திரும்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், குத்துக்கல்வலசை வழியாக தென்காசிக்கு வரவேண்டும். இவ்வாறாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்