அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கச்சிராயப்பாளையம் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான ஜெயவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தண்டபாணி ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி அலுவலர் பூமலை, தொ.மு.ச.செயலாளர் சிவக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராணி வரவேற்றார். விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகளிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு பஸ்சில் அமைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டனர். இதில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பழனி, ராமு, பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் குமரன், அய்யப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.