மணவாளக்குறிச்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்;கலெக்டர் அலுவலகத்தில் மனு

மணவாளக்குறிச்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-25 18:53 GMT

நாகர்கோவில், 

மணவாளக்குறிச்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கு பாதை

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று மணக்காட்டுவிளையைச் சேர்ந்த மணிகண்டன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பரப்பற்று ஊரில் எங்கள் சமுதாய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். சுடுகாட்டிற்கு பாதை கிடையாது. ஒருவரின் பட்டா நிலம் வழியாக சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்றோம். கடந்த 2020-ம் ஆண்டு அந்த தனிநபர் பாதை சுற்றுச்சுவர் எழுப்பி அடைத்து விட்டார். எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக்கோட்டில் வாழும் எங்கள் சமுதாய சுடுகாட்டுக்கு அரசின் சட்ட- திட்டங்களுக்கு உட்பட்டு, கட்டாய நில ஆர்ஜித நடவடிக்கை மேற்கொண்டு பாதை வசதி ஏற்படுத்தித்தர சமுதாய மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்