குண்டடம் ஒன்றியம் கொக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தர்மர் புதூர் இடையபட்டியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தர்மர் புதூரில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், பொது மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் வெளியூர் செல்லவும் மார்க்கெட்டுகளுக்கு காய் கறிகளை விற்பனைக்கு கொண்டுசெல்லவும் இந்த தார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் எப்போதும் இந்த சாலையில் அதிகளவு போக்குவரத்து இருக்கும் இந்த நிலையில் இடையபட்டியில் இருந்து தர்மர் புதூர் செல்லும் தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்தது குண்டும்,குழியுமாக மாறி உள்ளது. மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான தார்ச்சாலையை சீரமைத்து தரவேண்டுமென மாணவ-மாணவிகள், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.