சாலையை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

சாலையை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

Update: 2022-12-30 16:37 GMT

அனுப்பர்பாளையம்

திருமுருகன்பூண்டி நகராட்சி 14-வது வார்டு உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகராட்சி மற்றும் வேலாயுதம்பாளையம் ஊராட்சி எல்லைப் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு விட்டு சாலை அமைக்கும் பணி விடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட பா.ஜனதா பொறுப்பாளர் சண்முகபாபு தலைமையில் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். மேலும் சாலையை முழுமையாக அமைக்கக்கோரி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்கள். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், வார்டு கவுன்சிலர் தேவராஜ் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாலையை முறையாகவும், முழுமையாகவும் அமைக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதையடுத்து விடுபட்ட இடத்தில் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்