சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்; 133 பேர் கைது

தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 133 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-10-26 19:00 GMT

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காலை சிற்றுண்டி தயாரிக்கும் பொறுப்பை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ரூ.6,750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது.

கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராசையா தலைமை தாங்கினார். நிதி காப்பாளர் கோவில் பிச்சை கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பிச்சுமணி உள்பட பலர் பேசினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 133 பேர் கைது செய்யப்பட்டு, ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்