பா.ஜ.க.வினர் சாலை மறியல்
கீழ்வேளூரில் பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சிக்கல்:
தஞ்சையில் அம்பேத்கர் சிலைக்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து கீழ்வேளூர் கடைத்தெருவில் பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமை தாங்கினார்.. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் நாகை, திருமருகலில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.