ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

கோட்டூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்தார்.

Update: 2022-07-01 15:22 GMT

கோட்டூர்;

கோட்டூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்தார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கம்பங்குடி அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி(வயது70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று மாலை தனது ஸ்கூட்டரில் மன்னார்குடிக்கு சென்று விட்டு தனது சொந்த ஊருக்கு வந்தார். தட்டாங்கோவில் மாரியம்மன் கோவில் நகர் அருகே பக்கரிசாமி வந்தபோது கம்பன்குடி ஆர்ச் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் 2 வாலிபர்கள் மன்னார்குடி நோக்கி சென்றனர்.அப்போது எதிரே வந்த பக்கிரிசாமி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது கார் மோதி அதே வேகத்தில் கவிழ்ந்தது. இதில் ஸ்கூட்டரில் சென்ற பக்கிரிசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் போலீசார் பக்கிரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காரில் வந்த கீழப்பள்ளிசந்தம் கிராமத்தை சேர்ந்த வேதமணி(30) கஜேந்திரன்(21) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வு ெபற்ற ஆசிரியர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் கம்பங்குடி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்