மொபட்- பால் வேன் மோதல்; கொத்தனார் பலி

அய்யம்பேட்டை அருகே மொபட் மீது பால் வேன் மோதியதில் கொத்தனார் உயிரிழந்தார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-04 20:20 GMT

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை அருகே மொபட் மீது பால் வேன் மோதியதில் கொத்தனார் உயிரிழந்தார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பால் வேன் மோதியது

அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் பொன் நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது33). கொத்தனார். சம்பவத்தன்று இரவு இவர் ஒரு மொபட்டில் வீட்டிலிருந்து புறப்பட்டு வீரசிங்கம்பேட்டை கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். மாத்தூர் தொட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த பால் வேன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட புண்ணியமூர்த்தி பலத்த காயமடைந்தார்.

பரிதாப சாவு

இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி புண்ணியமூர்த்தி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவர் பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்