சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-05-22 19:05 GMT

தஞ்சை மீன் மார்க்கெட் அருகே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் மார்க்கெட்

தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் ரவுண்டானா அருகில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதியில் வெள்ளைப்பிள்ளையார் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே மீன் மார்க்கெட் இருப்பதால் மீன் வியாபாரிகள் அங்கு உள்ள கழிவு நீரை சாலையில் உள்ள பள்ளத்தில் கொட்டி விடுகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கழிவுநீர் சாலையில் தேங்கி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர்.

தொற்று நோய் பரவும்

மேலும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பதோடு மீன் மார்க்கெட்டில் இருந்து கழிவுநீர் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்