அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் ராமநாதபுரத்துக்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது
தஞ்சையில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது. ராமநாதபுரத்துக்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.;
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து நேற்று 2,000 டன் நெல் 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் தஞ்சையில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து 1,250 டன் அரிசி லாரிகளில் ஏற்றி வரப்பட்டு சரக்கு ரெயிலின் 21 வேகன்கள் மூலம் ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.