நெல் நாற்று நடும் பணி தீவிரம்

வத்திராயிருப்பு பகுதியில் நெல் நாற்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-02-15 20:02 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதியில் நெல் நாற்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல் சாகுபடி

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், கூமாப்பட்டி, இலந்தைகுளம், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், ஆயர்தர்மம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் பிரதானமாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது முதல் போக நெல் அறுவடையை முடித்தனர். இதையடுத்து கோடை கால நெல் நாற்றும் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மானிய விலையில் எந்திரங்கள்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது முதல் போக நெல் அறுவடையை முடித்து விட்டு கோடை கால நெல் நடவினை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை கால நெல் நடவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கண்மாய்களில் நீர் உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை இன்றி கோடை கால பருவ நெல் அறுவடையை தாங்கள் சிறப்பாக முடித்து அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் அரசு தங்களுக்கு மானிய விலையில் நெல் நடவு செய்வதற்கு நடவு எந்திரங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்