மழையால் சேதமடைந்த நெற்பயிர்களைகணக்கெடுக்கும் பணி

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

Update: 2023-02-07 18:45 GMT


திருவாரூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

கணக்கெடுக்கும் பணி

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1லட்சத்து 48 ஆயிரத்து 319 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த கனமழையினால் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்த வயல்களில் பயிர் சேத கணக்கெடுப்பு பணி திருத்துறைப்பூண்டி தாலுகா உதயமார்த்தாண்டபுரம், கள்ளிக்குடி ஆகிய கிராமங்களில் நடந்தது. இந்த கணக்கெடுக்கும் பணியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி தாலுகா, உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மொத்த சாகுபடி பரப்பு 654 எக்டேரில் 90 எக்டேர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும், கள்ளிக்குடி கிராமத்தில் மொத்த சாகுபடி பரப்பு 294 எக்டேரில் 65 எக்டேர் நெற்பயிர்கள் பாதிப்படைந்தாக கலெக்டர் தெரிவித்தார்.

கலப்பு மீன்வளர்ப்பு

தொடர்ந்து, சங்கேந்தி கிராமத்தில் பண்ணைக்குட்டைகள் மற்றும் கிணறுகளில் உள்நாட்டு கலப்பு மீன்வளர்ப்பு பயிற்சியில் கலந்துக்கொண்டு பயிற்சியில் பங்குபெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்