ஆசிட் குடித்து ஓய்வு பெற்ற ஆசிரியை தற்கொலை

திருவண்ணாமலையில் ஆசிட் குடித்து ஓய்வு பெற்ற ஆசிரியை தற்கொலை

Update: 2022-06-19 15:28 GMT

திருவண்ணாமலையில் அருணகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் தாண்டவராயன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவரது மனைவி சுசிலா (வயது 65). இவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3-வது மகன் குமரனுடன் தங்கி வசித்து வந்தனர்.

சுசிலாவிற்கு வயது முதிர்வு காரணமாக கண்பார்வை தெரியவில்லை என்றும், கடந்த சில நாட்களாக அவர் உடலநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று மாலை வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

சிறிது நேரம் கழித்து குளியலறைக்கு சென்ற தாண்டவராயன், சுசிலா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்