ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை

கொரடாச்சேரி அருகே வீட்டிற்குள் ஆடு புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது ெதாடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-21 18:45 GMT

கொரடாச்சேரி அருகே வீட்டிற்குள் ஆடு புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது ெதாடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வீட்டிற்குள் ஆடுபுகுந்ததால் தகராறு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள ஆணை வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 72). இவரது மனைவி சசிரேகா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தியாகராஜன், சுகாதாரத்துறையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி அஞ்சம்மாள். முருகேசன் விவசாய கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் முருகேசன் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு தியாகராஜன் வீட்டில் புகுந்துள்ளது. அதனை விரட்டிவிட்ட தியாகராஜன் ஆடு வீட்டிற்குள் புகுந்தது குறித்து முருகேசனிடம் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அடித்துக்கொலை

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் முருகேசனும் அவரது மனைவி அஞ்சம்மாளும் சேர்ந்து தியாகராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டனர்.

இதில் பின்னந்தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தியாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவன்-மனைவி கைது

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரடாச்சேரி போலீசார், தியாகராஜன் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முருகேசன்(52) மற்றும் அவரது மனைவி அஞ்சம்மாள்(45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்