ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் பலி

ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் பலி

Update: 2022-05-28 16:33 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் பரிதாபமாக இறந்தார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் சாவு

வேதாரண்யம் வட்டம் கோவில்பத்து மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவசண்முகம் (வயது73). ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர்.

இவர் தனது வீட்டிலிருந்து கோவில்பத்து கடைத்தெருவிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது வளைவில் திரும்பும் போது கொள்ளிடத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. பின்னர் அருகே இருந்த கடைக்குள் லாரி புகுந்தது. இதில் கடை சேதமடைந்தது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதில் படுகாயம் அடைந்த சிவசண்முகத்தை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்