தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை

வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-04-14 20:57 GMT

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீ விபத்தின் போதும் மீட்புப்பணியின் போதும் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டு தோறும் 'தீ தொண்டு நாள்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று காலை மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நெல்லை மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா வீரமரணம் அடைந்தவர்கள் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அனைத்து தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதே போல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் உத்தரவுப்படி, கங்கை கொண்டான் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில், நேற்று தீ தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது. வீர மரணம் அடைந்த வீரர்கள் நினைவு சின்னத்துக்கு, நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதுதவிர கங்கைகொண்டான் பஜார் மற்றும் சுற்றுப்புறங்களில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்து, துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்