கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, எட்டயபுரம் வினியோகப் பிரிவிற்கு உள்பட்ட 11 கி.வோட் மின் தொடரில், சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. எனவே, எட்டயபுரம் உப மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கீழஈரால் மற்றும் நக்கலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.