சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் - ராமதாஸ்

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-01-02 05:57 GMT

சென்னை,

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

சென்னை ஐகோர்ட்டு உட்பட நாட்டின் அனைத்து ஐகோர்ட்டுகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசின் சட்டத்துறை கூறியிருப்பது கவலையளிக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியும் கூட எந்த மாற்றமும் நிகழவில்லை. அறிவுரைகள் ஏற்கப்படவில்லை என்றால் சட்டம் இயற்றுவது தான் ஒரே தீர்வு.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்டவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்