ஆலங்குளம் ஊராட்சியை தரம் உயர்த்த கோரிக்கை

ஆலங்குளம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-14 20:37 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்நிலை ஊராட்சி

ஆலங்குளம் ஊராட்சி தற்போது முதல் நிலை ஊராட்சியாக உள்ளது. இங்கு சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி, புளியடிபட்டி, அண்ணாநகர், வசந்த் நகர், கலைஞர் நகர், இருளப்ப நகர், பெரியார் நகர், நேதாஜி நகர், சிமெண்டு ஆலை காலனி, அம்பேத்கர் காலனி, ஜெ.ஜெ.நகர், தேவர் நகர், எம்.ஜி.ஆர்.நகர், இந்திராநகர்., ஆகிய கிராமங்கள் உள்ளன.

ஆலங்குளம் ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆலங்குளம் அருகே ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், கண்மாய்பட்டி, அருணாசலபுரம், எல்.மேட்டுர், சீவலப்பேரி, டி.கரிசல்குளம், டி.மேட்டூர், புளியடிபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

தரம் உயர்த்த வேண்டும்

ேமற்கண்ட அனைத்து கிராமங்களையும் ஆலங்குளம் ஊராட்சியுடன் இணைத்து ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அவ்வாறு தரம் உயர்த்தினால் அனைத்து தரப்பு மக்களும் மேலும் பயன்பெறுவர்.

இதனால் கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க வாயப்பு உள்ளது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து ஆலங்குளத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்