கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல கோரிக்கை

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என ரெயில் நிலைய மேலாளரிடம் த.மா.கா.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-09-23 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி ெரயில் நிலையத்தில் வந்தே பாரத் ெரயில் நின்று செல்ல கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் ெரயில் நிலைய மேலாளர் முகேஷ் குமாரிடம் மனு வழங்கினர்.

அந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரம் கோவில்பட்டி. இவ்வருவாய் கோட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 தாலுகாக்களும், 400-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களும், 5 ஊராட்சி ஒன்றியங்களும், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் என மூன்று சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது. இங்கு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தெற்கு ெரயில்வே நிர்வாகத்தில் மதுரை ெரயில்வே கோட்டத்தில் மதுரை, நெல்லைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான வருவாயை ஈட்டி தரக்கூடிய ெரயில் நிலையமாக கோவில்பட்டி ெரயில் நிலையம் அமைந்துள்ளது. எனவே கோவில்பட்டியில் வந்தே பாரத் ெரயில் நின்று செல்ல வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருமுருகன், முத்துச்சாமி, மாநில மாணவரணி செயலாளர் மாரிமுத்து, ராமலிங்கம், நகர செயலாளர் திருமுருகன், துணை தலைவர் வின்சென்ட், துணை செயலாளர் மணிமாறன், வட்டார துணைத் தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்