எதிர்க்கோட்டை தடுப்பணையை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-08-14 19:24 GMT

தாயில்பட்டி, 

எதிா்க்கோட்டை தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பணை

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் காயல்குடி ஆறு ராஜபாளையம், நதிக்குடி, புலிப்பறைப்பட்டி எதிர்கோட்டை வழியாக வெம்பக்கோட்டை வைப்பாற்றில் கலக்கிறது.

இதில் விவசாய பணிக்காக காயல்குடி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என எதிர்க்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.

நெல் சாகுபடி

காயல்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த தடுப்பணையின் தண்ணீரை பயன்படுத்தி குண்டாயிருப்பு, ஜமீன் கல்லமநாயக்கன்பட்டி, உப்புபட்டி, எதிர்க்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காயல்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தடுப்பணை முற்றிலும் சேதமடைந்தது.

விளைநிலங்கள்

இதனால் தடுப்பணையில் தண்ணீர் நிற்காமல் சென்றதால் விவசாய பணிகள் நடைபெறாமல் விளைநிலங்கள் தரிசாகி வருகின்றன.

ஆதலால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சேதமடைந்த தடுப்பணையை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்