கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
அறந்தாங்கி அருகே கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி ஊராட்சியில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகே மின்கம்பம் ஒன்று கஜா புயலில் சேதம் அடைந்து தற்போது அபாயகரமான நிலையில் உள்ளது. மேலும், மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து உள்ளது. ஆனால் இதுவரை அந்த மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் அகற்றாமல் உள்ளனர். பயணிகள் நிழற்குடைக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருதி இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.