தூர்ந்துபோன வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை
தூர்ந்துபோன வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ராஜீவ் நகர் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலில் ஏராளமான கருவேல மரங்கள், செடி-கொடிகள் முளைத்து தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வாய்க்கால் வழியாக மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.