வக்கீல் கொலையில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடி வக்கீல் முத்துக்குமார் கொலையில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞா் கூட்டமைப்பினர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-02-25 18:45 GMT

தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமையில் நிர்வாகிகள், வக்கீல் முத்துக்குமார் கொலையில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். பின்னர் வழக்கறிஞர் மாரப்பன் கூறுகையில், வக்கீல் முத்துகுமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் குற்றவாளிகள் அனைவர் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் சமீபகாலமாக வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தத்துக்குரியதாகும். இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

செயலாளர் காமராஜ், துணை தலைவர்கள் குடியரசு, ரமேஷ் மற்றும் பொருளாளர் முரளி, தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் அய்யாவு, மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்